தெமட்டகொட பகுதியில் உள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் காயமடைந்த இருவரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அர்ஜுன ரணதுங்கவின் பாதுகாப்பு அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் காயம் – தெமட்டகொடவில் பதற்றம்
தெமட்டகொடவில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்குள் உள்ள துப்பாக்கி சூட்டில் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கூட்டுத்தாபனத்திற்குள் வருகை சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது முன்னாள் அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே இவ்வாறு இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறைத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.