யார் பிரதமர்? என்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் பிரதமர் நியமனம் அரசியலமைப்பின் பிரகாரமும் சட்ட பூர்வமானதாகவும் அமைய வேண்டும் என தெரிவித்துள்ள அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்கள், தம் பக்க நியாயங்களை மாத்திரம் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதால் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மேலும் உக்கிரமடையலாம் எனவும் அறிவித்துள்ளன.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமரும் ஏற்கனவே பதிவியில் உள்ள பிரதமரும் தம் பக்க நியாயங்களை கூறி வருகின்றனர். ஆனால் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டிய சூழலை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. சபாநாயகர் கரு ஜயசூரிய மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மஹா சங்கத்தினரை சந்தித்தார். இதன் போது விரைவாக பாராளுமன்றத்தைக் கூட்டி பிரச்சினைக்கு தீர்வு காணுமாறே வலியுறுத்தியுள்ளதாக இரு பீடங்களும் அறிவித்துள்ளன.
சபாநாயகர் கரு ஜயசூரிய இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களை சந்தித்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து தெளிவுபடுத்தியுள்ளார். இதன் பின்னரே இரு பீடங்களும் மேற்கண்டவாறு சபாநாயகருக்கு அறிவித்துள்ளன.