ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் 1,008 பாதுகாப்பு அதிகாரிகள் அவரது பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது 10 அதிகாரிகள் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காவற்துறை மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் கட்டளையின் அடிப்படையிலேயே இவ்வாறு பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐயோ சிறிசேன என்பாதுகாப்பு நீக்கம்
முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் பாதுகாப்புக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் தெரிவித்துள்ளார். புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ள நிலையில் இலங்கை அரசியலில் நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நிதி அமைச்சரின் பாதுகாப்புக்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளது, ” ஜனாதிபதி மைத்திரிபால மீண்டும் தாக்குகிறார்…. எனது பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டது ஐயோ….சிறிசேன” என தெரிவித்துள்ளார்.