153
– நாளை கட்சித் தலைவர்கள் கூட்டம்…
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்ற சூழலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிகளான தமது கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி 126 எம்.பிக்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ரணில் விக்கிரமசிங்க உட்பட 126பேர் இதில் கையொப்பமிட்டுள்ளனர். இதனையடுத்து நாளை காலை நாடாளுமன்றத்தில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை சபாநாயகர் கூட்டுவதற்கு தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தை கூடுவது குறித்து இந்தக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்படவுள்ளது.
Spread the love