பங்களாதேசின் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவிற்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் பிரதமராக இருந்த காலத்தில் அவரது பெயரில் இயங்கிவரும் அறக்கட்டளைகளுக்காக நன்கொடையாக வெளிநாடுகளிலிருந்து பல இலட்சம் அமெரிக்க டொலர்களை முறை கேடாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இக் குற்றச்சாட்டு தொடர்பாக கலிதா ஜியா மற்றும் அவரது மகன் தாரிக் ரஹ்மான் உதவியாளர்கள் என பலர் மீது டாக்காவின் சிறப்பு நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கு விசாரணையில் கலிதா ஜியா முறைகேடாக 2.5 இலட்சம் அமெரிக்க டொலர்களை பெற்றமை நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த பெப்ரவவரி மாதம் அவருக்கு 5 ஆண்டுகளும் அவரின் மகன் உட்பட உதவியாளரகள் ; ஐவருக்கு தலா 10 வருடங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கலிதா ஜியாவிற்கும் அவரது ஆட்சியின் போது பணியாற்றிய செயலாளர் , உதவியாளர் மற்றும் டாக்கா நகர முன்னாள் மேயர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால் இவர்கள் அனைவருக்கும் தலா 7 வருடங்கன் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கலிதா ஜியா மீது மேலும் 34 வழக்குகள் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.