228
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். விஜேராமவில் உள்ள மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இன்று விசேட கூட்டம் ஒன்று இடம்பெற உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து பேசப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love