158
அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான, கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் சந்தன கலன்சூரிய இன்று பிடியானைப் பிறப்பித்துள்ளார்.
மிகவும் பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தி, விபத்தொன்றை ஏற்படுத்தி நபர் ஒருவருக்கு காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே, மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு பிடியானை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப் போது, சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலை ஆகாததால், நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
Spread the love