அனைத்து அரசியல் தலைவர்களும் குறுகிய மனப்பான்மையுடன் சிந்திக்காது நாட்டின் நலன்கருதி தற்போது உருவெடுத்துள்ள அரசியல் நெருக்கடி நிலைக்கு தீர்வுகாண்பதற்கு முன்வர வேண்டும் என இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் யாப்புக்கு ஏற்ப செயற்பட வேண்டுமெனவும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் ஜே.வின்ஷ்டன் எஸ். பர்னாந்து மற்றும் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் பிரதம செயலாளர் ஆயர் டி.வலன்ஸ் மென்டிஸ் ஆகியோர் கையொப்பமிட்டு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டள்ளது.
எடுக்க்கப்படும் எவ்வித தீர்மானமாக இருப்பினும், அது நீதிக்கும் சட்டதிட்டங்களுக்கும் ஏற்ப அவற்றை கடைப்பிடித்தல் அவசியம் எனவும் பதவியில் நிலைத்திருப்பதோ பதவியிலிருந்து நீங்குவதோ முக்கிய விடயம் அல்ல எனவும் குறிப்பிடப்பட்டள்ளது. மக்கள் சக்தியையும் இயற்கையிலேயே கிடைக்கப்பெற்ற கொடைகளுக்கும் இடையூறு விளைவிக்காது, நாட்டின் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிப்பது முக்கியம். எனவே அனைவரும் ஞானத்துடனும் நல்லறிவுடனும் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது