ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி Hanaa Singer அம்மையார் இன்று (31.10.18) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் இதன்போது ஜனாதிபதி ஐ.நா பிரதிநிதிக்கு தெளிவுபடுத்தியதுடன், அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் அரசியலமைப்பின் பிரகாரமே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை தெளிவுபடுத்தினார்.
நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து ஜனநாயக கட்டமைப்பிற்குள் செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபை தொடர்ச்சியாக இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புகளை பாராட்டினார். இதன்போது கருத்து தெரிவித்த (Hanaa Singer) அம்மையார் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் இலங்கைக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்க தயாராக உள்ளதெனத் தெரிவித்தார்.