ஜனாதிபதி இரு வாராங்களுக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைத்த நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்று வரும் அரசியல் ஸ்திரமற்ற நிலைக் காரணமாக எதிர்வரும் இரு வராங்களுக்கு (16 ஆம் திகதி வரை) பாராளுமன்ற கூட்டத்தொடரை ஒத்திவைக்குமாறு ஜனாதிபதி உத்திரவிட்டார். இந்நிலையில் சபாநாயகர் கரு ஜெயசூரிய 16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து இன்று சபாநாயகர் மற்றும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது சபாநாயகர் மீண்டும் அதே கோரிக்கையை முன்வைத்தார். பாராளுமன்றத்தை 16 ஆம் திகதிக்கு முன் கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
16 ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தை கூட்டுவது தொடர்பில் பரிசீலிக்கப்படும்…
135
Spread the love