210
பிரான்ஸில் கைகள் இல்லாமல் அதிழகளவில் குழந்தைகள் பிறந்ததை தொடர்ந்து, அதற்கான காரணத்தை கண்டறிய தேசிய அளவிலான விசாரணையை அந்நாடு ஆரம்பித்துள்ளது. பிரான்ஸில் மூன்று இடங்களில் இவ்வாறு பல குழந்தைகள் பிறந்ததை தொடர்நது சுகாதாரத் துறை விசாரணை மேற்கொண்டுள்ள போதிலும் அதற்கான காரணத்தை சுகாதாரத் துறை அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. இந்தநிலையியிலேயே காரணத்தை கண்டறிய தேசிய அளவிலான விசாரணையை அந்நாடு ஆரம்பித்துள்ளது.
சுவிஸ் எல்லையை அண்மித்துள்ள கிராமப்புற பகுதிகளிலும், வட மேற்கு கடற்கரை பகுதிகளிலும் இவ்வாறான குழந்தை பிறப்புகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love