அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபையின் தலைவர் டேவிட் பீவெர் பதவிவிலகியுள்ளார். அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியின் போது பான் கிராப்ட், டேவிட் வார்னர், ஸ்மித் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியமைக்காக ஐசிசி அவர்களுக்கு அபராதத்துடன் ஒன்றிரண்டு போட்டிகளில் தடைவித்த போதிலும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டுசபை அவர்களுக்கு ஓராண்டு தடைவித்திருந்தது. அவர்களுடைய தண்டனையை திரும்பப் பெற வேண்டும் என வலுயுறுத்தப்பட்ட போதும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் கட்டுப்பாடுசபை அதனை நிராகரித்திருந்தது.
தொடர்ந்தும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்கான சங்கம் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபைத் தேர்ததலில் டேவிட் பீவெர் 2-வது முறையாகவும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
எனினும் பந்தை சேதப்படுத்திய விவகாரத்துக்கு பொறுப்பேற்று அவர் பதவி விலகவேண்டும் என வலியுறுத்தப்பட்டமையினால் டேவிட் பீவெர் பதவிவிலகியுள்ளார். இதனையடுத்து இயர்ல் எட்டிங்ஸ் இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.