“ஒரு வேளை பிழைத்து வந்தால் என் தாயார் மீது வைத்துள்ள அன்பை அவருக்கு புரிய வைப்பேன்”
https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2232781266959362/
“நாலாப்புறமும் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்பதால் நான் பிழைக்க மாட்டேன்” என இறுதியாக தனது தாயுடன் உருக்கமாக பேசியுள்ளார். இதையடுத்து அவரும் இந்த சம்பவத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். சத்தீஸ்கரின் தாண்டேவாடா பகுதியில் தேர்தல் குறித்த செய்திகளை சேகரிக்க செய்தியாளர்கள் சென்றனர். அதன்போது காட்டுப் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே கடும் மோதல் இடம்பெற்றது. இந்த மோதலின் போது செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மீதும் நக்சல் போராளிகள் தாக்குதல் நடத்தியதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அங்கு செய்தி சேகரித்துக் கொண்டிருந்த தூர்தர்ஷன் செய்தியாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். இதில் தூர்தர்ஷன் ஒளிப்பதிவாளர் மீதும் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததில் அவர் கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் 2 பாதுகாப்பு படை வீரர்களும் பலியாகி உள்ளனர். இந்நிலையில் ஒளிப்பதிவாளர் இறப்பதற்கு முன்னர் தனது தாயிடம் உருக்கமாக பேசும் செல்பி வீடியோ வெளியாகியுள்ளது.
அந்த வீடியோவில் அவர் கூறுகையில் “நக்சலைட்டுகள் எங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். தாண்டேவாடாவில் தேர்தல் செய்திகளை சேகரித்து கொண்டிருந்தோம். நாங்கள் ஒரு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தோம். ராணுவமும் எங்களுடன் இருந்தது.
அப்போது நக்ஸல் தீவிரவாதிகள் எங்களை சுற்றி வளைத்தனர். நாலாப்புறமும் நக்ஸலைட்டுகள் சூழ்ந்து தாக்குதல் நடத்தினர். என்னுடன் வந்தவர்களையும் சுட்டு வருகின்றனர். இதில் பிழைக்க மாட்டேன் என்று கருதுகிறேன். உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு வேளை பிழைத்து வந்தால் என் தாயார் மீது வைத்துள்ள அன்பை அவருக்கு புரிய வைப்பேன். பயமாக உள்ளது நானும் இவர்களால் சுட்டுக் கொல்லப்படலாம். இங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. அது ஏன் என்று தெரியவில்லை. என் கண் முன் நக்ஸல்கள் எல்லாரையும் சுட்டுக் கொன்று வருகின்றனர். எனக்கு பயமாக உள்ளது. நான் பிழைப்பது கடினம்.
எங்களுடன் 6 முதல் 7 பாதுகாப்பு வீரர்கள் மட்டுமே உள்ளனர். நக்ஸல்கள் நாலாப்பக்கமும் எங்களை சுற்றி வளைத்துள்ளனர் என்றார். இந்த நிலையில் அவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.