175
“ஜனநாயகத்திற்காக உண்மையான மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் கொழும்பை அண்மித்த நுகேகொடவில் மக்கள் விடுதலை முன்னணியின் மக்கள் கூட்டம் ஒன்று இடம்பெறுகிறது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய பிரதமர் பதவிக்கான நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், நாட்டில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த வலியுறுத்தியும் இம்மக்கள் கூட்டம் இடம்பெற்று வருகிறது. இதில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்கள், பல்கலைகழக பேராசிரியர்கள், சிவில் அமைப்பின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love