வெள்ளை இனத்தைச் சேர்ந்த சொகுசு விடுதி ஊழியர்கள் 7 பேருக்கு எதிராக, பாகுபாடு காண்பிக்கப்பட்டுள்ளதாக கனடாவின் மனித உரிமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
இத்தீர்ப்பினை வழங்கியுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள அத்தீர்ப்பாயம், அவர்களுக்கு 1,73,000 கனேடியன் டொலர்கள் நஸ்ஈடாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
அந்த கேளிக்கை விடுதியின் உரிமையாளர் வெள்ளை இன ஊழியர்களை நீக்கிவிட்டு சீன நாட்டை சேர்ந்தவர்களை பணியில் அமர்த்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சீனர்கள் குறைவான ஊதியம் பெறுவார்கள் என்பதால் அப்படிச் செய்ததாக விடுதியின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
2016ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் குறித்த ஏழு வெள்ளையின ஊழியர்களும் அகற்றப்பட்டு, சீன ஊழியர்கள் அமர்த்தப்பட்டிருந்தநிலையில் இனத்தை அடிப்படையாக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் இந்த நடவடிக்கையானது பிரிட்டிஷ் கொலம்பியாவின் மனித உரிமை விதிகளுக்கு எதிரானது எனவும் தீர்ப்பாயம் கூறியுள்ளது.