முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்னவை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அவரை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு அல்லது அதற்கு முன்னர் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
2008, 2009 காலப்பகுதியில், 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி என்பவருக்கு அடைக்கலம் வழங்கி அவர் வெளிநாடு செல்ல உதவி வழங்கியமை தொடர்பிலேயே அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முப்படைகளின் பிரதானிக்கு எதிராக சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமை மிகவும் அதிருப்தி அளிப்பதாக பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.