எதிர்வரும் 7ஆம் திகதி பாராளுமன்றத்தை கூட்டும் போது 118 பெரும்பான்மையை நிரூபித்து மஹிந்த அணியினரை வீட்டுக்கு அனுப்புவோம் எனவும் சம்பிக்க றணவக்க சவால் விடுத்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ தனது சட்டவிரோத பணப்பலத்தை பயன்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது பக்கம் திசைதிருப்ப முயற்சி செய்கின்றார் எனவும் குறிப்பிட்டார்.
கடந்த 26ஆம் திகதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ நியமிக்கப்பட்டதை தொடர்ந்து பல புதிய அமைச்சர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேசிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக அங்கம்வகித்தவர்கள் தமது அமைச்சு பதவிகளை கைவிட்டு, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு, அரசியலமைப்புக்கு முரணான வகையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறி பாராளுமன்ற அமர்வை உடனடியாக கூட்டுமாறும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பிற்பகல் பெருநகரம் மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு சென்ற சம்பிக்க ரணவக்க அலுவலகத்தின் கதிரையில் அமர்ந்து “இது என்னுடைய அமைச்சும் என்றும் நான் தொடர்ந்து எனது பொறுப்புக்களை முன்னெடுப்பேன்” எனவும் அங்குள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
ரணில் அமைச்சரவையின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க, அமைச்சின் அலுவல்களில் ஈடுபட்டுள்ளார்..
Nov 2, 2018 @ 08:28
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தற்போது பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. அவர் தற்போதும் பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சின் கடமைகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் அமைச்சின் அலுவல்களில் ஈடுபட்டுள்ளமை அவரது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தினங்களில் அமைச்சுக்கள் சிலவற்றுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்ட போதிலும் பெரு நகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சுக்கு அமைச்சர் ஒருவர் இதுவரை நியமிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.