குளோபல் தமிழ் செய்தியாளர்
தமிழ்க் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் மகிந்தவின் பக்கம் கட்சி தாவியுள்ளார். இதத் தொடர்ந்து பிரதேச அபிவிருத்தி (கிழக்கு மாகாண அபிவிருத்தி) பிரதியமைச்சராக அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டார்.
அத்துடன் எஸ்.பி. நாவின்ன கலாச்சார அலுவல்கள், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இவ் அமைச்சுப் பதவிகள் சற்றுமுன்னர் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் (PLOT) ஊடாக கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்றிற்கு தேர்வுசெய்யப்பட்டவர் என்பதோடு அவ்வமைப்பின் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் பிரதி தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.