காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் பா.ஜ.க. தலைவர் மற்றும் அவரது சகோதரர் கொலை செய்யப்பட்டதை அடுத்து கிஸ்த்துவார், தோடா, பதேர்வா ஆகிய 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில பாரதிய ஜனதா செயலாளர் அனில்பரிகார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் நேற்றிரவு தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து பல இடங்களிலும் பொது மக்கள் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதனால் அங்கு மோசமான நிலை ஏற்பட்டதையடுத்து நிலையை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் மேற்குறிப்பிட்ட 3 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மேலும் சில மாவட்டங்களில் 4 பேருக்கு மேல் கூடக்கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீரில் சமீப ஆண்டுகளில் அரசியல் தலைவர்கள் கொல்லப்படுவது இதுவே முதல் முறையாகும் எனவும் எஇதனால் நிலைமை மோசமாக உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது