வடக்கு ஜப்பானில் உள்ள சிறிய தீவு ஒன்று காணாமல் போயுள்ள நிலையில் இந்தத் தீவு கடல்நீரில் மூழ்கிவிட்டதா என ஆய்வு மேற்கொள்ள ஜப்பான் முடிவெடுத்துள்ளது. இசாம்பே ஹனகிட்ட கொஜிமா என்ற இந்தத் தீவு 1987-ல் கண்டுபிடிக்கப்பட்டது, அண்மையில் இது கடல் மட்டத்திலிருந்து 1.4 மீற்றர் உயரம் மேலே வந்த பின்னர் அதனைக் காணவில்லை எனத் தெரிவிப்பட்டுள்ளது.
பூகம்பம், உள்ளிட்ட தீவிர காலநிலை மாற்றங்களினாலும் தீவுகள் காணாமல் போகும், 2004 இந்தோனேசியாவில் ஏற்பட்ட 9 ரிக்ரர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தினைத் தொடர்ந்து தீவு ஒன்று சில கிமீற்றர்கள் நகர்ந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கனிமவள ஆதாரங்களின் அடிப்படையில் ஒகினோடோரி தீவுகள் தனிச்சிறப்பான பொருளாதார மண்டலமாக ஜப்பான் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது