Home இலங்கை மகிந்தவுக்கு ஆதரவு கோர கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள மைத்திரி?

மகிந்தவுக்கு ஆதரவு கோர கூட்டமைப்பை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ள மைத்திரி?

by admin

மகிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சு வார்த்தைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் 7ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடியில் மகிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த விடயம் மகிந்த ராஜபக்சவை வெற்றி பெறச் செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும் எனக் கருதியுள்ள ஜனாதிபதி இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்வதில் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகின்றது.

தமது கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை கட்சி தாவச் செய்து பிரதி அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஜனாதிபதியை தாம் எப்படி இந்தச் சந்திப்பது எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

2 comments

Siva November 4, 2018 - 1:17 pm

திரு. மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு கோரும் வகையிலான திரு. மைத்திரிபால சிறிசேனவின் சந்திப்பை TNA யினர் புறக்கணிப்பதே பொருத்தமானதாக இருக்கும். இதில் தயக்கம் கொள்ள வேண்டிய அவசியம் எதுவுமில்லை.

அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் திரு. நாமல் ராஜபக்ஷவின் ஊடக அறிக்கைகளை அடுத்து அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை விடும் திரு. மைத்திரிபால சிறிசேனவுக்கு முதுகெலும்பே இல்லையோ, என எண்ணத் தோன்றுகின்றது. இது தொடர்பில் கடந்த மூன்றரை வருடங்களாக விடுக்கப்பட்ட பலப்பல கோரிக்கைகள், போராட்டங்கள் தொடர்பில் எதையுமே செய்யாத இவர், இத் தருணத்தில் அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க முன்வருகின்றாரென்றால், இவர் அவர்களின் இறப்பர் முத்திரையாக மாறிவிட்டார் என்றுதானே அர்த்தப்படுகின்றது? இனிமேல் பெயருக்குப் பதவி வகிக்கப் போகும் இவரை கண்டுகொள்ளத்தான் வேண்டுமா?

திரு.மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில், TNA யினருடனான சந்திப்புக்கான கோரிக்கைகள் பலவற்றை அன்று அவர்கள் புறக்கணித்திருந்தமையை மறக்கக் கூடாது. அதிகாரத்தில் உள்ளவர்களுடன் ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்ள முடியாது, என்பது உண்மையேயாயினும், எடுப்பார் கைப் பிள்ளையாக இருப்பதும், ஆரோக்கியமல்ல.

இறைமையுள்ள இந்நாட்டின் சகல உரிமைகளுக்கும் உரித்துடைய நாம், எமது தேவைகளைப் போராடிப் பெறவேண்டிய நிலைமைக்கு காரணம் எமது கடந்த கால எஜமான விசுவாசமே, என்றால் அது மிகையில்லை. எமது உரிமைகளுக்காக எந்தச் சிங்களத் தலைமையையும் நம்பியிருப்பதை விடுத்து, ஜனநாயக ரீதியாகப் போராடிப் பெறுவதே நல்லது. அதற்கு வேண்டிய சர்வதேச சமூகத்தின் ஆதரவை, புலம்பெயர் தமிழ் அரசியற் செயற்பாட்டாளர்களினூடாகப் பெற முயல வேண்டும். சிந்திப்போமா?

Reply
Logeswaran November 4, 2018 - 2:22 pm

வெவ்வேறு அரசாங்கங்களின் பிரதிநிதிகளை சந்திக்க வாய்ப்பிருக்கும் எதிர்க்கட்சி தலைவர், செல்வாக்கு உள்ள மற்றைய தமிழ்த் தலைவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் என்பவர்களின் உதவியுடன், பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நடத்தக் கூடிய உலகின் அதி சிறந்த நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று அவர்களின் பங்களிப்புடன் பன்னாட்டு ஆதரவு, மற்றும் தலையீட்டைக் கொண்டுவந்து சுயாட்சியை எடுக்க, தமிழ்த் தலைவர்கள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

For example the Tamils should talk to the following successful negotiators and involve them to get a political solution for the Tamils.

1.Bill Clinton – Former US President for Palestinian’s peace process.

2.George Mitchell – US Peace negotiator for Northern Ireland.

3.Bertie Ahern – Former Irish Prime Minister – A negotiator for the peace in Northern Ireland.

4.Tony Blair’s 10 Principles to Guide Diplomats in International Conflict Resolution – Former UK Prime Minister – Peace negotiator for Northern Ireland.

https://www.pon.harvard.edu/daily/international-negotiation-daily/international-negotiations-and-conflict-tony-blairs-10-principles-for-dispute-resolution-negotiations/

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More