190
கூட்டு எதிரணியைச் சேர்ந்த 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ஸ, உதய கம்மன்பில ஆகிய நால்வருக்கே இவ்வாறு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அமைச்சரவையில் இதுவரை கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் எவருக்கும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத நிலையில், அரசமைப்புக்கு அமைய, மேலும் 15 அமைச்சர்களுக்கும், 24 இராஜாங்க, பிரதி அமைச்சர்களுக்குமான வெற்றிடங்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love