பாகிஸ்தானில் தெய்வ நிந்தனை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று விடுதலையான கிறித்துவ பெண்ணான ஆசியா பிபியின் கணவர் ஆஷிக் மாசி அமெரிக்கா, கனடா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளார். பாகிஸ்தானில் தாம் ஆபத்தில் இருப்பதாக ஆஷிக் மாசி தெரிவித்துள்ளார். ஆசியா மீது சுமத்தப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போதிய ஆதரங்கள் இல்லை எனத் தெரிவித்து நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நீதிமன்றம் அவரை விடுதலை செய்திருந்தது.
அவரின் விடுதலை எதிராக பல வன்முறை போராட்டங்கள் நடைபெற்றதனைத் தொடர்ந்து ஆசியா நாட்டைவிட்டு வெளியேறுவதை தடுப்பதாக அந்நாட்டு அரசு ஒப்புக் கொண்டுள்ளது. 2010ஆம் ஆண்டு அயல் வீட்டினருடன் நடந்த சண்டையில், முகமது நபிகளை அவமதித்து பேசியதாக ஆசியா பிபி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது