பிரெஞ்சு பசுபிக் பிராந்தியமான நியூ கலிடோனியா பிரான்சின் பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது சுதந்திரமாக செயல்பட வேண்டுமா என்ற வாக்கெடுப்பில் அப்பகுதி கலந்து கொள்கின்றனர். இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிரிவினைவாதிகள் வன்முறை பிரசாரம் செய்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஓர் பகுதியாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்படுகின்றது
பாரிஸின் காலனித்துவ அதிகாரிகளின் கட்டுப்பாட்டை தூக்கி எறிய உள்ளூர் மக்கள் வாக்களிக்க வேண்டும் என சுதந்திரத்தை ஆதரிக்கும் குழுக்கள் வலியுறுத்தியுள்ளன. எனினும், அங்குள்ள மக்கள் சுதந்திரத்தை புறக்கணிப்பாளர்கள் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது