தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிடிவாதம் பிடித்து வந்தார் என மங்கள சமரவீர தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் நடவடிக்கை எடுப்பார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பதிவட்ட டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு பதிவிட்டள்ளார்.
2015 முதல் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சிறிசேன பிடிவாதமாக மறுத்து வந்த தமிழ் அரசியல் கைதிகளே தற்போது விடுதலையாகவுள்ளனர் எனவும் இது இன்னொரு அரசியல்சந்தர்ப்பவாத கபடநாடகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.