தனக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிப்பதற்கான எந்தவொரு ஏற்பாடுகளும் சட்டத்தில் இல்லை என முன்னாள் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை பறிக்க ஜனாதிபதி மைத்திரி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் சரத்பொன்சேகாவின் பங்களிப்பை பாராட்டி, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பீலட் மார்சல் பட்டம் வழங்கப்பட்டது. இலங்கையில் இப்பட்டத்தை பெற்ற முதலாவது நபர் என்ற பெருமையும் சரத் பொன்சேகா பெற்றிருந்தார்.
இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரி, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய உள்ளி்டவர்களை கொலை செய்யும் சதித் திட்டத்தில் சரத்பொன்சேகாவுக்கு தொடர்பிருப்பதாக கூறி இலங்கையில் பாரிய அரசியல் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பீல்ட் மார்ஷல் பட்டத்தை நீக்க ஜனாதிபதி ஆலோசித்து வருவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது