ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசார்த் பதியூதீன் ஆகியோருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் சந்திப்புகள் நடைபெற்றுள்ளன. ஜனாதிபதி மாளிகையில் இச் சந்திப்புக்கள் இடம்பெற்றுள்ளன. நேற்று முன்தினம் இரவு றிசார்த் பதியூதீனை அழைத்து பேச்சுவார்த்தையில் மேற்கொண்ட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான பாராளுமன்றத்தை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகின்றது.
இதேவேளை நேற்றுக் காலை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை அழைத்து அரசாங்கத்திற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சியினை முன்னெடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ள ஹக்கீம் கட்சிகளை பிரித்து, கட்சித் தாவல்களுக்கு ஊக்குவிப்பது தவறான செயற்பாடுகள் என ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இச் சந்திப்புக்களை முடித்துக் கொண்டு அலரி மாளிகைக்குச் சென்று ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் இருவரும் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
1 comment
Now actually these folks in real turmoil ha ha ha…no more hanky panky in further political future over Sri Lanka.