பிரெஞ்சு பசுபிக் பிராந்தியமான நியூ கலிடோனியா பிரான்சின் பகுதியாக இருக்க வேண்டுமா அல்லது சுதந்திரமாக செயல்பட வேண்டுமா என்ற வாக்கெடுப்பில் பிரான்சின் பகுதியாக இருக்க வேண்டும் என நியூ கலிடோனியா மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில் 56.4 சதவீதமானோர் பிரான்ஸின் ஆளுகையிலேயே இருக்கலாம் எனவும் 43.6 சதவீதமானோர் பிரிந்து சென்று தனி நாடு அமைக்கலாம் என்பதற்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். இந்த வாக்கெடுப்பில் 81 சதவீதம் பேர் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1988 ஆம் ஆண்டு இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிரிவினைவாதிகள் வன்முறை பிரசாரம் செய்ததை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஓர் பகுதியாக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது இந்த வாக்கெடுப்பு அமைதியாக நடந்த போதிலும், வாக்கெடுப்புக்கு பின்பு சில இடங்களில் அமைதியின்மை நிலவி உள்ளதாகவும் தலைநகர் நைவ்மியாவில் வாகனங்களுக்கும், கடைகளுக்கும் தீ வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த நியூ கலெடோனியா பகுதியில் அதிகளவில் நிக்கல் கிடைப்பதனால் பசுபிக் பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக பிரான்ஸால் நியூ கலெடோனியா பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது அதேவேளை இது பிரான்ஸ் குடியரசின் மீதுள்ள நம்பிக்கையை காட்டுவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங் தெரிவித்துள்ளார். தான் இதனை மிகவும் பெருமையாக உணர்வதாகவும் ஒரு வரலாற்று காலக்கட்டத்தை ஒன்றாக கடந்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.