ஆபிரிக்க நாடான கமரூனின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையிலிருந்து பெருமளவு மாணவர்கள் ஒட்டுமொத்தமாக கடத்தப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. வட மேற்கு பிராந்தியத்தின் தலைநகர் பேமெண்டாவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் குறைந்தது 79 மாணவர்கள் கடத்தப்பட்டதாக அரச மற்றும் ராணுவத் தகவல்களை மேற்கோள் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
ஆயுதம் தாங்கிய நபார்கள் இன்று திங்கட்கிழமை காலை அவர்களைக் கடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கமரூனின் வட மேற்கு மற்றும் தென் மேற்கு பிராந்தியங்கள் அண்மைக்காலமாக பிரிவினைவாதக் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஆங்கிலம் பேசும் இரண்டு பகுதிகளை தனி நாடாகப் பிரிக்கவேண்டும் எனவும் பாடசாலைகளை புறக்கணிக்கவேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருந்த ஆயுதக் குழுக்களும் எவையும் இந்த மாணவர்கள் கடத்தலை தாங்கள்தான் செய்ததாக ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது