இலங்கை, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி, இன்று காலி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டி இலங்கை சார்பில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் ரங்கன ஹேரத்தின் இறுதி டெஸ்ட் போட்டியாக அமைவதானால் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
இந்தநிலையில் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்துவார்கள் அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்தை வெற்றியுடன் வழியனுப்பிவைக்க எண்ணியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.
தாங்கள் அதனை தற்போது வெளிப்படுத்த விரும்பவில்லை எனவும் அவருக்கு சில ஆச்சரியங்களை வைத்துள்ளோம் எனவும் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார். முதலாவது டெஸ்டையும் தொடரையும் தங்களால் வெல்ல முடிந்தால் அது ரங்கன ஹேரத்திற்கான சிறந்த பிரியாவிடையாக அமையும் எனவும் தினேஸ் சந்திமல் தெரிவித்துள்ளார்.