இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் சபாநாயகர் கருஜெயசூரியவை சந்தித்துள்ளார். அலைனா டெப்லிட்ஸ் தனது டுவிட்டர் செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக பாராளுமன்றத்தினை கூட்டவேண்டியதன் அவசியத்தை சபாநாயகரிடம் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக ஸ்தாபனங்கள் இலங்கை மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என தெரிவித்துள்ள அமெரிக்கதூதுவர் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்கள் தீர்மானங்களை எடுப்பதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.சபாநாயகர் கருஜெயசூரிய கடும் அழுத்தங்களை சந்தித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது