கர்நாடக மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் 4 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும், ஒரேயொரு இடத்தில் பாரதிய ஜனதா கட்சியும் வென்றுள்ளன. கர்நாடக மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கும், 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 3ம் திகதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணிக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவிய இந்த இடைத்தேர்தலில் 65 சதவீதம் வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர்.இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், பெல்லாரி, மாண்டியா மக்களவை தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் மத சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி வென்றுள்ளன.2004, 2009 மற்றும் 2014ம் ஆண்டு என தொடர்ந்து 3 முறை பாரதிய ஜனதாவின் கோட்டையாக இருந்து வந்த பெல்லாரி, இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது