186
பெருவில் பயணிகள் பேருந்து மீது பாரவூர்தி மோதி ஏற்பட்ட விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 39 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருவின் புனோ பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் வந்த பாரவூர்தி , பேருந்து மீது வேகமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு குழந்தை மற்றும் 12 பெண்கள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர் எனவும் மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love