முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக நியமித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உருவாக்கப்பட்டு இருக்கும் புதிய அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் மக்கள் பேரணி ஒன்று நேற்றுமுன்தினம் (05.11.18) நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதில் கலந்துக்கொண்டு உரையாற்றியிருந்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசியக் கீதம் இசைக்கப்பட்டிருந்ததோடு, தேசியக் கீதம் இசைக்க தொடங்கியதும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கை அசைப்பதைக் அவதானித்திருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, தேசிய கீதம் இசைக்கப்படுவதாக கூறியதன் பின்னர் ஜனாதிபதி சுதா கரித்துக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. இதேவேளை இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, குண்டுத் துளைக்காத அங்கியை அணிந்திருந்ததாக குறிப்பிட்டு அவரின் புகைப்படம் ஒன்றும் சமூகவலைத்தளங்களில் பரவி வருவதும் குறிப்பிடத்தக்கது.