ஈராக்கில் 200க்கும் மேற்பட்ட மனித புதைக்குழிகளில் ஆயிரக்கணக்கான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஐ.எஸ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக் பகுதிகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட மனித புதைக்குழிகளிலேயே இவ்வாறு ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடல்கள் உடல்கள் காணப்பட்டமை ஐநாவின் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
நினிவே, கிர்குக், சலாவுதீன் மற்றும் அன்பார் போன்ற மேற்கு பகுதி நகரங்களில் இந்த மனித புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சுமார் 12 ஆயிரம் பேரின் உடல்கள் இந்த மனித புதைக்குழிகளில் இருக்கலாம் என குறித்த ஐநா அறிக்கையில்p தெரிவிக்கப்பட்டுள்ளது.குடந்த 2014ம் ஆண்டு ஈராக்கின் பகுதிகளை கைப்பற்றிய ஐஎஸ் அமைப்பு தம்மை எதிர்த்த அனைவரையும் கொன்று குவித்தது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது