குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னாரில் இது வரையான அகழ்வு பணிகளின் போது கிடைக்கப் பெற்ற மனித எலும்புக்கூடுகளில் 18 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது எனவும் பெண்கள் தொடர்பான விபரங்கள் முழு பரிசோதனையின் பின்னரே தெரிய வரும் எனவும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தெடர்ச்சியாக மழை பெய்கின்ற போதும் மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணியானது 102 வது நாளாக இன்று (7) தொடர்சியாக இடம் பெற்று வருகின்றது .
மன்னார் நீதவான் ரி.சரவண ராஜா மேற்ப்பார்வையிலும் சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையிலும் அகழ்வு அகழ்வ பணி இடம் பெற்று வருகின்றது. அந்த வகையில் இன்று புதன்கிழமை (7) மனித புதை குழி வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே சட்ட வைத்திய அதிகாரி அவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…..
குறிப்பாக இன்றைய தினத்துடன் 102 வது தடவையாக மனித எலும்புக்கூடுகள் அகழ்வுபணிகள் இடம் பெறுவதாகவும் இதுவரை 232 மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதில் 224 மனித எலும்புக்கூடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மேலதிக மனித எலும்புக்கூகளை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்சியக இடம் பெறுவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் இது வரையான அகழ்வு பணிகளின் போது கிடைக்கப் பெற்ற மனித எலும்புக்கூடுகளில் 18 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடயது எனவும் பெண்கள் தொடர்பான விபரங்கள் முழு பரிசோதனையின் பின்னரே தெரியவரும் எனவும் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த வாரத்தில் சந்தேகத்திற்கு உரிய விதமாக சில தடைய பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அதில் மோதிரம் போன்ற ஒரு தடையப் பொருளும் மாபிளை ஒத்த ஒரு தடையப் பொருளும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே வகையில் குறித்த மனித புதை குழியில் இருந்து கிடைக்கப் பெற்ற முக்கிய தடய பொருளான மெலிபன் பக்கற் தொடர்பான அறிக்கையானது நீதி மன்றத்துக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தனக்கு அவ் அறிக்கை தொடர்பான விபரங்கள் தெரியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.