177
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் முன்னர் வழங்கப்பட்ட அதே பாதுகாப்பினை தொடர்ந்து வழங்கவேண்டும் என விடுக்கப்பட்ட கோரிக்கையை காவல்துறைமா அதிபர் பூஜித் ஜெயசுந்தர நிராகரித்துள்ளார்.
காவல்துறையினர் ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளனர் எனவும் ஜனாதிபதியின் உத்தரவுக்கமையவே தன்னால் பாதுகாப்பை வழங்க முடியும் எனவும் தெரிவித்த அவர் அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ விடுக்கும் கோரிக்கைகளுக்கேற்ப தன்னால் பாதுகாப்பை வழங்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love