197
இரண்டு அமைச்சரவை அமைச்சர்களும் ஒரு இராஜாங்க அமைச்சரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். சமல் ராஜபக்ஸ சுகாதார அமைச்சராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். எஸ்.பி.திசாநாயக்க நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். பவித்ராதேவி வன்னியாராச்சி பெட்ரோலிய வள இராஜாங்க அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
Spread the love