மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்சியாகப் பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 499 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முஹம்மத் றியாஸ் கூறியுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சியில் இரணைமடு குளத்தின் நீரின் அளவு உயர்ந்துள்ளமை காரணமாக வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் வன்னியில் உள்ள அக்கராயன்குளம், முறிப்புக் குளம் முதலியவற்றின் நீர் நிலைகளும் உயர்ந்துள்ளதாக நீர்பபாசன திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியில் இன்று புதன் கிழமை ஆரம்பித்த அடை மழை தொடர்ந்து பொய்து வருகின்றமை காரணமாக வெள்ளப் பாதிப்புக்கள் ஏற்படலாம் என் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.