கோபத்தில் பந்தை தூக்கி எறிந்த இங்கிலாந்து அணித்தலைவர் ஜேம்ஸ் அன்டர்சனை கண்டித்துள்ள ஐசிசி அவருக்கு தடைக்கான ஒரு புள்ளியும் வழங்கியுள்ளது. இலங்கை – இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இலங்கை அணி துடுப்பாடிக் கொண்டிருந்த போது ஜேம்ஸ் அன்டர்சன் பந்து வீசிய போது ஆடுகளத்தின் அபாயகரமான பகுதியில் ஓடியதாக நடுவர் எச்சரித்தார்.
இதனால் கோபம் அடைந்த ஜேம்ஸ் அன்டர்சன் பந்தை கோபமாக தூக்கி எறிந்தார். இதுகுறித்து போட்டி நடுவரிடம் முறைப்பாடு வழங்கப்பட்டதனையடுத்து போட்டி முடிந்த பின்னர், அன்டர்சன் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் ஐசிசி அவரை எச்சரித்ததுடன், போட்டி தடைக்கான ஒரு புள்ளியையும் வழங்கியுள்ளது.