பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவுக்கு, விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் ஜனவரி 14 ஆம் திகதி வரைக்கும், கொழும்பு விசேட மேல் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டுள்ளது.
டீ.ஏ.ராஜபக்ஸ அருங்காட்சியகம் நிர்மாணிக்கப்பட்டபோது, இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதிமோசடி தொடர்பிலான வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போதே, நீதிபதிகள் மேற்கண்டவாறு பயணத்தடையை நீக்கியுள்ளனர்.
கோத்தபாய ராஜபக்ஸ விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையானார்..
Nov 9, 2018 @ 05:02
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சற்று முன்னர் விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். டீ.எ ராஜபக்ஸ நினைவுத்தூபி மற்றும் அருங்காட்சியகம் அமைப்பதற்கு அரச நிதி 90 மில்லியன் ரூபாவை பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேரிற்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு விசாரணைக்காகவே கோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது