நாஸி ஜேர்மனியிலிருந்து தப்பி, கனடா நோக்கிச் சென்ற 900க்கும் மேற்பட்ட யூதர்களைக் கொண்ட கப்பலை ஏற்றுக் கொள்வதற்கு, 1939ஆம் ஆண்டில் கனடா மறுத்தமைக்காக, கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, உத்தியோகபூர்வமாக மன்னிப்புக் கோரியுள்ளார். அத்தோடு, வன்முறைகளிலிருந்து யூதர்களைக் காப்பதற்காக, அதிகமான பணிகளைக் கனடா ஆற்றுமெனவும் அவர் உறுதியளித்தார்.
குறித்த கப்பல், கனடாவால் மாத்திரமன்றி, வேறு சில நாடுகளாலும் ஏற்க மறுக்கப்பட்ட நிலையில், ஐரோப்பாவுக்கே திரும்பியிருந்தது. அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட இந்த 907 பேரில் 250 பேராவது, நாஸிக்களால் கொல்லப்பட்டனர் என, வரலாற்றாய்வாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது