இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, நோர்வே , சுவிட்சர்லாந்து ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகள், இணைந்து வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது
இது தாமதிக்குமானால் சர்வதேசத்தில் இலங்கைக்கு இருக்கின்ற நன்மதிப்புக்கு பாதிப்பு ஏற்படும் எனவும், முதலீட்டாளர்கள் இலங்கையை நாடுவதில் பாதிப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது