சிலியில் முன்னாள் ராணுவத்தளபதிக்கு மூன்று வருடங்களும் ஒரு நாளும் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1973ஆம் ஆண்டு சிலியில் ராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பினைத் தொடர்ந்து 15 பேர் கொல்லப்பட்டமை தொடர்பிலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புகளுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்ட முன்னாள் ராணுவ தளபதியான 71 வயதான ஜெனரல் ஜுவான் எமிலியோ (Juan Emilio) என்பவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதித்து சிலி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராணுவத்தால் ஆட்சி கவிழ்ப்பு மேற்கொள்ளப்பட்டப் பின் அதனை எதிர்க்கும் செயற்பாட்டாளர்களை கொல்ல ஒரு ஒரு குழு அனுப்பபட்டதாகவும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தார் என எமிலியோ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது