ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்துள்ள அரசாங்கத்தில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர் பிரிந்து செல்ல தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய அரசாங்கத்தில் அமைச்சுக் பொறுப்புக்களை பெற்ற பல சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய பிரதமர் நியமனம் , பாராளுமன்ற ஒத்திவைப்பு மற்றும் 19 அரசியலமைப்பை மீறும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்தமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளே இவர்கள் சுதந்திர கட்சியிலிருந்து விலகி ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவ்தற்கு காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது