190
ஐக்கிய தேசியக் கட்சி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக எனும் தொனிப்பொருளில் இன்று மாலை 6 மணிக்கு கங்காராம விகாரைக்கு அருகில் இந்த மெழுகுவர்த்திப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்
இதேவேளை, ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் நேற்றைய தினம் சிலாபம் முன்னேஸவரம் கோவிலில் தேங்காய் உடைத்து வழிபாட்டில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Spread the love