பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை தொடர்பில் ஏதேனும் தவறு இழைக்கப்பட்டிருக்குமாயின் பொறுப்பு வாய்ந்த கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசிய கட்சி நீதிமன்றத்தின் உதவியை நாடியிருக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சமாதான ரீதியில் செயற்படாமல் மோதல் வழிகளில் நாட்டை முன்னெடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி முயற்சிப்பதாகவும் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் இந்த நிலையை சரி செய்வதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளர்h.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான தயாசிறி ஜயசேகர, சுசில் பிரேமஜயந்த, உதய கம்மன்பில உள்ளிட்டோர் கலந்து கொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் உதய கம்மன்பில, ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானம் தவறு என்றால் அதற்கு பொதுமக்கள் சரியான பதிலை வழங்குவார்கள் எத் தெரிவித்த்துடன் முன்னைய அரசாங்கத்தின் செயற்பாடு தவறு என்றால் பொதுமக்கள் அவர்களுக்கு தண்டனை வழங்குவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்