எதிர்வரும் பொதுத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ வேண்டுகோள் விடுத்துள்ளார் . களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதற்கும் கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட மகிந்த பாணி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் அவருக்கு பெரும்பான்மை அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
ரணில் அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் தோல்வியடைந்துவிட்டது எனத் தெரிவித்த கோத்தாபய குறிப்பாக பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதில்முற்றாக தோல்வியடைந்துன்னது எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்டதும் ஐக்கியதேசிய கட்சியும் ஏனைய சில கட்சிகளும் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்கின்றன எனவும் தேர்தலை நடத்தாமல் என்ன ஜனநாயகத்தை அவர்கள் ஏற்படுத்தப்போகின்றனர் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.