பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக 10 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன கலைத்தமைக்கு எதிராக இவ்வாறு மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருந்தார். இதனை அடுத்து அரசியல் கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இவ்வாறு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் யாவும், பிரதமர் நீதியரசர் நளின் பெரேரா தலைமையிலான நீதியரசர்கள் குழாமினால் ஆராயப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது