குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தத்திற்கு பின்னர் மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை எற்படுத்தும் வகையில் மத தலைவர்கள் மற்றும் மதம் சர்ந்த அங்கத்தவர்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் முரண்பாடுகளையும் தவிர்ப்பதற்கான செயற்பாடுகளின் ஒன்றாக தேசிய சமாதன பேரவையின் அணுசரனையில் எல்.எல்.ஆர்.சி. (LLRC) அமைப்பின் ஏற்பாட்டில் இரண்டு நாள் பயிற்சி நிகழ்வு இன்று திங்கட்கிழமை (12) மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மதம் சார்ந்த முரண்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளதன் காரணமாக நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய பல்வேறு சமூக விரேத செயற்பாடுகள் பிரதேச மட்டத்தில் அதிகரிப்பதினை குறைக்கும் நோக்குடன் தேசிய சமாதன பேரவையின் அணுசரனையில் இன்று திங்கட்கிழமை (12) காலை 10 மணியளவில் மன்னார் ஆஹாஸ் விருந்தினர் விடுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த பயிற்சி பட்டறையில் மதம் சார்ந்த முரண்பாடுகளை குறைப்பதற்கான விரிவுரைகளும் அத்துடன் முரண்பாடுகள் அற்ற கலந்துரையாடல் தொடர்பான பூரண விளக்கங்கலும் நடைமுறை பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் சர்வமத பிரதிகள் மற்றும் மதம் சார்ந்த அங்கதவர்கள் கிராம அலுவலர்கள் காவல்துறை உத்தியோகஸ்தர்கள், மற்றும் சமூக ஆர்வளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவ் நிகழ்வுக்கு சிறப்பு வளவாளராக செயல் திட்ட முகாமைத்துவ ஆலோசகர் ஜே. பெனா கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.